எல்லை / அச்சுறுத்தப்பட்ட கிராமங்களைப் பாதுகாப்பதற்காக 1980ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொண்டு சேவையாக தேசிய ஊர் காவல் சேவை ஸ்தாபிக்கப்பட்டது. அவர்களுக்கு 12 துளை அளவுள்ள துப்பாக்கிகளும் பழுப்பு நிறமான சீருடைகளும் வழங்கப்பட்டன. அவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை, ஆனால் கூட்டுறவு விற்பனை நிலையத்தின் ஊடாக உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து அவர்கள் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் சேவையில் அமர்த்தப்பட்டு நாட் சம்பளம் வழங்கப்பட்டது. ஹொரண, கும்புக்க முகாமில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
மாண்புமிகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் 2006 செப்டம்பர் 13ஆம் திகதியிட்ட 1462/ 20ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் முழு ஊர்காவல் சேவை மீளமைக்கப்பட்டு சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது.
தொழில் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,500ஆக அதிகரிக்கப்பட்டு ஒரு மாத இராணுவ பயிற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இராணுவ சீருடையை ஒத்த இருவகையான சீருடைகள் வழங்கப்பட்டன. ஊழியர்களுக்கு நியாயமான சம்பளமும் வழங்கப்பட்டது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓர் இராணுவ அதிகாரி (ரியர் அட்மிரல் தரமுள்ளவர்) நியமிக்கப்பட்டார்.
முதலாவது பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் கலாநிதி. சரத் வீரசேகரவும் இரண்டாவது பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் ஆனந்த பீரிசும் நியமிக்கப்பட்டனர். தற்போதைய பணிப்பாளர் நாயகம் திரு. சந்திரரத்ன பல்லேகம அவர்கள். சிறந்த நிர்வாகத்துக்காக இராணுவம் மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து சுமார் 69 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.